வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷாலு ஷம்மு சமீப காலமாக இணைய மீடியாக்களில் அதிகம் அடிபடுகிறார். கவர்ச்சி ஆட்டம், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுதல் என மீடியாக்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க என்னை படுக்கையை பகிர சொன்னார்கள். ஆனால், மறுத்து விட்டேன் என புகார் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக என்னையும் சேர்த்திருந்தார்கள். ஆனால், கோர்ட், கேஸ் என இருப்பதால் மீரா மிதுனை செலக்ட் செய்து விட்டனர்.
17-வது போட்டியாளர் நடிகை ஆல்யா மானசா தான். அவர் ஒரு சீரியலில் நடித்துக்கொண்டிருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. இப்போது, அந்த சீரியல் முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
