மீரா மிதுன் என்ற பெயர் கடந்த 40நாட்களுக்கு முன்பு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இப்போது கேட்டல் அவருடைய ஜாதகத்தையே புட்டு புட்டு வைப்பார்கள். அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியுள்ளார் மாடலும் நடிகையுமான மீரா மிதுன்.
இவரை பற்றி கெட்டதாக ஒரு விஷயத்தையாவது கூறாத பிரபலங்களே இல்லை. அந்த அளவுக்கு பொய் பேசக்கூடியவர். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி மீரா மிதுன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், மீரா மிதுன் காரணமே இல்லாமல் பொய் பேசக்கூடிய ஒரு ஆள். நடிகர்கள் சிம்பு மற்றும் ஜீவா ஆகியோர் என்னை காதலித்தார்கள் என்று என்னிடமே கூறியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அவர் அப்படி சொன்னதும், உன்னை மட்டும் ஏன் எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று கூறினேன் என்று கூறியுள்ளார் சனம் ஷெட்டி.



