இயக்குனர் முருகதாஸ்நடிகர் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பிரபல பாடகர் எஸ்.பி.பி ஒரு பாடலை பாடியுள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பேட்ட படத்தை போல இரண்டு வரிகளை மட்டும் எஸ்.பி.பிக்கு கொடுக்காமல் முழு பாடலையும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
ஏற்கனவே, தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியாகி படககுழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
படக்குழுவில் உள்ள யாரோ ஒருவர் தான் இந்த வேலைகளை செய்கிறார் என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறார் முருகதாஸ். இதனால், படப்பிடிப்பு தளத்தில் கடுமையான கெடுபிடி என்று நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.
ஆனால், எஸ்.பி.பி செய்துள்ள ஒரு வேலை தான் முருகதாஸின் டென்ஷனை அதிகமாகியுள்ளது.
ஆம், தர்பார் படத்தில் பாடியது குறித்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.பி.பி. கூறியதாவது,
அருமையான சிச்சுவேஷன். ரஜினி சார் மும்பையில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.
அவருக்காக பாராட்டு விழா நடத்துகிறார்கள். கடமையை செய்வதற்கு எதற்காக
பாராட்டு விழா எல்லாம் நடத்துகிறீர்கள் என்று ரஜினி சார் கேட்பார்.
காக்கிச் சட்டையை போட்டால் நான் போலீஸ், கழற்றினால் நான் சாதாரண மனிதன்
என்று கூறி ஒரு பாட்டு பாடுவார். அந்த பாடலை தான் நான் பாடியிருக்கிறேன்.
ரொம்ப அருமையா வந்திருக்கு, அனிருத் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகள்
என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வீடியோக்கள் கசிந்தது போதாது என்று.. இவரு படத்தோட ஸ்க்ரிப்டையே லைன் பை லைனா சொல்லிகிட்டு இருக்காரே என கடுப்பில் இருக்கிறாராம் முருகு.