23 வயதில் S.P.B எப்படி இருக்கின்றார் தெரியுமா? நடிகர்களையும் மிஞ்சிய அழகு..! இணையத்தில் கசிந்த புகைப்படம்
தமிழ் திரை உலகம் எத்தனையோ பின்னணி பாடகர்களை கண்டுள்ளது. ஆனால் எஸ்பி பாலசுப்பிரமணியம் மட்டும் அதில் தனித்து தெரிகிறார். அவரது இந்த தனித்துவம்தான் இத்தனை ஆயிரம் பாடல்களை பாட வைத்து மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடிக்க வைத்தது. கர்நாடக இசையை முறைப்படி கற்றுக்கொண்டு அவர் திரையுலகம் வந்தவர் இல்லை. ஆனால் சங்கராபரணம் திரைப்படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலை சிறப்பாக பாடி தேசிய விருது பெற்றவர் என்றால் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடியும். புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம், கோவிட் -19 தொற்றுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய பிறகு, செப்டம்பர் 25ம் தேதி காலமானார். அற்புதமான பாடகர் எஸ்.பி.பி-யின் ரசிகர்கள் அவரது அற்புதமான இசைத்தொகுப்புகள் மற்றும் இந்திய இசையில் அவருடைய பங்களிப்புகளை நன்கு அறிவார்கள். தற்போது மறைந்த எஸ்.பி.பியின் புகைப்படம் ஒன்றினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அந்த புகைப்படத்திற்கு பின்னால் மிகவும் சுவாரஷ்யமான ரகசியம் ஒன்று மறைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் , மேடைகளில் மட்டுமே க...