ஏற்கனவே விஜய்யை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறேன் - சிறுத்தை சிவா கூறிய அதிர்ச்சி தகவல்..!


சிறுத்தை சிவா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். வீரம், வேதாளம், விவேகம், விசஸ்வாசம் என அடுத்தடுத்து அதிரடியான படங்களை கொடுத்து கலக்கினார் சிறுத்தை.


அஜித்தை வைத்து மட்டும் தான் படம் எடுப்பீர்களா..? விஜய்யை வைத்து படமெடுக்க மாட்டீர்களா..? என்று அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, நான் ஏற்கனவே ஒரு விஜய் படத்தை எடுத்திருக்கிறேன் என அதிர வைத்தார்.


என்ன சார் சொல்றீங்க..? என்று கேட்டால். ஆம், விஜய் நடித்த பத்ரி படத்தில் நான் கேமரா மேனாக பணியாற்றினேன். படத்தின் பல காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளை நான் தான் படம் பிடித்தேன் என்று கூறியுள்ளார்.