பாலிவுட்டில் நடிகை கங்கனா ரணாவத் நடிபில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் ‘குயின்’. இந்த படத்தை தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள்.
இதில், நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரில் நடிகை காஜல் அகர்வாலின் முன்னழகை சக நடிகை பிடித்து அமுக்குவது உள்ளிட்ட ஆபாச காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.
தொடர்ந்து சென்சாருக்கு சென்ற படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 25 காட்சிகளை வெட்டி வீசினார்கள். இதை படக்குழுவினர் எதிர்த்து மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பினார்கள்.
இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது, ‘பாரிஸ், பாரிஸ்’ படத்தில் 25 காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கியதை அறிந்து அதிர்ச்சியானேன். மலையாளம், தெலுங்கில் குயீன் ரீமேக் படத்துக்கு எந்த காட்சியையும் நீக்காமல் ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் மட்டும் எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை..? இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்றார். தணிக்கை குழுவினர் நீக்கி உள்ள காட்சிகள் நமது நிஜ வாழ்க்கையில் அன்றாடம் நடக்க கூடிய விஷயங்கள் தான்.
அதனை நீக்கியது மிகுந்த வேதனை அளிக்கிறது. எந்த காட்சியையும் நீக்காமல் படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார். அந்த காட்சிகளை நீக்கும் பட்சத்தில் படத்தின் தன்மையே காணமல் போய்விடும்.
இந்த நிலையில் மறு தணிக்கை குழுவினர் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தை இன்று பார்க்கின்றனர். 25 காட்சிகளை நீக்கியதை ரத்து செய்து படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா..? என்பது இன்று மாலை அல்லது நாளை காலை தெரிய வரும் என்று கூறுகிறார்கள்.
Tags
Kajal Aggarwal