பிக்பாஸ் சீசன் 3 - உள்ளே வந்த 17வது போட்டியாளர்..! - யாரு தெரியுமா..? இதோ வீடியோ..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் நேற்று வழங்கப்பட்ட ‘தன் கையே தனக்கு உதவி’ டாஸ்க்கை போட்டியாளர்கள் ஆர்வமாக விளையாடத் தொடங்கினர். 

உடல் உழைப்பை அதிகமாக தேவைப்படும் டாஸ்க் என்பதால் லோஸ்லியா, கவின், சேரன் உள்ளிட்ட போட்டியாளர்கள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அவ்வப்போது தவித்தனர். 

”காசு... பணம்... துட்டு... மணி... மணி....” என்ற பாட்டுடன் பிக்பாஸ் வீட்டில் காலைப்பொழுது புலர்ந்தது. லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்குக்கான பஜர் அடிக்கப்பட்டவுடன் போட்டியாளர்கள் நேற்றைய ‘தன் கையே தனக்கு உதவி’ போட்டியை விளையாடத் தொடங்கினர். 


பிறகு, பிக்பாஸ் வீட்டு பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்கள் போல வேடமணிந்து நடிக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில், சேரனாக நடித்த மதுமிதா மற்றும் முகினாக நடித்த அபிராமி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டனர். 


அத்துடன் இந்த வாரத்திற்கான பிக்பாஸ் எபிசோட் நிறைவடைந்தது.

இந்நிலையில், இன்று நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். போட்டியாளராக வந்துள்ளாரா..? அல்லது விருந்தினராக வந்துள்ளாரா..? என்பது குறித்த விபரங்கள் இல்லை என்றாலும் அவருடைய என்ட்ரி வித்தியாசமாக இருந்தது.

பெரிய சைஸ் கிஃப்ட் பாக்ஸ் ஒன்றிலிருந்து வருகிறார் கஸ்தூரி. இதோ அந்த வீடியோ,
Previous Post Next Post
--Advertisement--