தொடர்ந்து நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 53 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடப்பது வழக்கம். இந்தமுறை இந்த டாஸ்க்குக்காக பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ளது.
விருந்தாளியாக என்ட்ரி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது நபராக வெளியேறிய வனிதா, நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்திருப்பதால் போட்டியாளர்களைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
ஆனால், இத்தனை நாட்களாக எந்த ஒரு பெரிய எதிர்ப்பையும் சம்பாதிக்காமல் இருந்த மதுமிதா. வனிதாவின் பேச்சை கேட்டுக்கொண்டு சக போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.
இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ள அபிராமி, முகென், மதுமிதா, கவின், லாஸ்லியா ஆகியோரில் நடிகை மதுமிதா தான் வெளியேறுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களை ஷாக் ஆக்கும் விதமாக விளம்பர பட நடிகை அபிராமி இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ளார் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இந்த வாரமாவது ரகசிய அறையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளரை வைப்பார்களா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.