வெளியானது பிகில் படத்தின் "வெறித்தனம்" பாடலின் 45 நொடி டீசர் - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்..!


தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். 

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 


கிட்டத்தட்ட ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருப்பதால் படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். 


இந்நிலையில், இந்த படம் குறித்த அடுத்த அப்டேட் இன்று (31-08-2019) மாலை 07:30 மணிக்கு வெளியாகும் எனவும் விஜய் ரசிகர்களின் 5 வருட காத்திருப்பு முடியவுள்ளது எனவும் அறிவித்தது தயாரிப்பு தரப்பு. 

இந்நிலையில், வெறித்தனம் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை ( 01-09-2019 ) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.முன்னதாக, இன்று அந்த பாடலின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,