அஜித்குமார் - வினோத் கூட்டணியில் உருவான "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், அஜித்தின் 60வது படத்தையும் வினோத் தான் இயக்குகிறார் என அதிகாரபூர்வமான செய்திகள் கடந்த வாரம் வெளியாகின.
இந்த திரைப்படம் இயக்குனர் வினோத்தின் கதையில் அவருக்கே உரிய பாணியான டார்க் மோடில் இயக்கவுள்ளதாகவும் இதில் நடிகர் அஜித் ஒரு ரேசிங் வீரராக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலெட்டியும் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags
Thala 60