சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் "விவேகம்" படத்தில் சறுக்கினார். புரியாத திரைக்கதை காரணமாக படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து, சிவா இயக்கத்திலேயே 'விஸ்வாசம்" என்ற படத்தில் நடித்தார். படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படமும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெற்றது. ஆக, ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் படங்களை இந் கொடுத்துவிட்டார் அஜித்.
இதை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கின்றார். இப்படத்திற்காக அஜித் கருப்பு முடியுடன் நடிக்கவுள்ளார் என கிசுகிசுக்கப்பட்டது, தற்போது வெளிவந்துள்ள புகைப்படம் அதை உறுதி செய்துள்ளது.
தற்போது விஷயம் அதுவில்லை, இந்த புகைப்படத்தில் அஜித்துடன் நிற்பது யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை 90ஸ் கிட்ஸ்ன் ஃபேவரட் நீச்சல் வீரரும் உலக அளவில் பல விருதுகளை வென்றவருமான குற்றாலீஸ்வரன் தான்.
இதனை, அவரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
Tags
Thala 60