தர்பார் வெளிநாட்டு வியாபாரம் - ஆல் டைம் ரெக்கார்டு..!


சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம் ஆகும். 

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. 


இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.இந்நிலையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் இருக்க, இப்படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது.


2.0 (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) படத்தை தவிர்த்து ஓவர்சீஸ் ரெக்கார்ட் என்று பார்த்தால் தர்பார் தான் இப்போது முதலிடத்தில் உள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் மட்டும் ரூ 35 கோடி வரை வியாபாராம் ஆகி சாதனை படைத்துள்ளது.