சாஹோ படத்திற்காக நடிகர் பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 350 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடித்துள்ள படம் என்பதால் சாஹோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 


யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடித்துள்ளார்கள். 


ஆகஸ்ட் 30 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நடிகர் பிரபாஸ் சாஹோ படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. அதாவது சாஹோ படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது.

இதன் மூலம் ரஜினிகாந்த், சல்மான் கான், ஷாருக்கான் போன்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ்.
Previous Post Next Post
--Advertisement--