நீச்சல் வீரர் குற்றாலீசுவரனுடன் சந்திப்பிற்கு இது தான் காரணமாம் - மாஸ் காட்டுறீங்களே தல..!


தல60 திரைப்படத்துக்காக தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து இளைமை தோற்றத்துக்கு நடிகர் அஜித் மாறியுள்ளார். அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் கடந்த 8ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. 

இப்போது, அதே கூட்டணியுடன் 'தல60' படம் உருவாகும் என்றும், ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்துக்காக அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து இளமை தோற்றத்துக்கு மாறியுள்ளார். 


இளமையான தோற்றத்துடன் வெளியான அஜித்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.சமீபத்தில்,பிரபnநீச்சல் வீரர் குற்றாலீசுவரன் நடிகர் அஜித்தை சந்தித்தார். 


இது குறித்து அவர் கூறுகையில், "தலயுடன் நம்பமுடியாத ஒரு மாலை. நான் உங்கள் பெரிய ரசிகன் என்று தல சொல்லும்போது, இந்த மனிதனின் எளிமை என்னை அசரடித்துவிட்டது. விளையாட்டு மேம்பாடு சம்பந்தமாக சில முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தின் பகிர்ந்துள்ளார்.

ஆளில்லா விமானம், துப்பாக்கி சுடுதல் என சினிமா தவிர மற்ற துறைகளிலும் அஜித் கவனம் செலுத்தி வரும் நிலையில் குற்றாலீசுவரனை சந்தித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

விளையாட்டு துறைக்கான முன்னெடுப்பு என்று குற்றாலீசுவரன் எதனை குறிப்பிட்டார் என்று வரும் காலங்களில் தான் பதில் கிடைக்கும்.
Previous Post Next Post