இத விட வேற என்ன வேணும்..! - "பிகில்" ஆடியோ விழாவில் நிறைவேறவுள்ள விஜய் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை..!


பிகில் படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்து விட்டன. இன்னும் ஒரு சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனிடையே படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு நடுவே ஆடியோவை பிராமண்ட விழாவாக நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


இது எல்லா விஜய் படங்களுக்கும் தான் நடக்கிறது. இதுல என்ன ஸ்பெஷல் என்று சொல்லுங்க மொதல்ல என்று கேட்கிறீர்களா..? சொல்கிறோம். ஆடியோ வெளியீட்டு விழாவில் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாக இசையமைத்து பாடுகிறார். 


அதை விட ஒரு ஸ்பெஷல் இருக்கு பாஸ். ஆம், நம்ம தளபதி விஜய்யும் நேரடியாக ரசிகர்கள் முன்பு நீண்ட நாட்களுக்கு பிறகு "வெறித்தனம்" பாடலை மேடையில் பாடப்போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. 


இந்த தகவல் குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால், படக்குழுவின் நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. "வெறித்தனம்" பாடலின் வரிகள் விஜய்க்கு மிகவும் பிடித்துள்ளதால் மேடையில் நானே பாடுகிறேனே என்று விஜய்யே முன் வந்து கூறியுள்ளார் என்றும் கூறுகிறார்கள். 

என்ன..? பிகிலடிக்க ரெடியா தளபதி நண்பர்கள் மற்றும் நன்பிகளே..!
Previous Post Next Post