நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் - ஹீரோ யாரு தெரியுமா..?


மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர், அனுபமா பரமேஸ்வரன். தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். 

ஆனால், தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கததால் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இந்திய கிரிக்கெட் டீமில் இருக்கும் வேக பந்து வீச்சாளார் ஜஸ்பிரித் பும்ராவை காதலிப்பதாக ஒரு தகவல் வெளியானது. 


ஆனால் இது குறித்து இருவருமே, வாய் திறக்க வில்லை.இந்திய அணி உலகக்கோப்பையை தோற்ற அடுத்த நாளே அனுப்பமாவை அன்ஃபாலோவ் செய்து விட்டார் பும்ரா. 


இதனால், இவர்களது காதல் சர்ச்சை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, தமிழில் வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு இப்போது நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகவுள்ள "நின்னு கோரி" என்ற ரீமேக் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.
Previous Post Next Post
--Advertisement--