மதுரை : சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்க முடியாமல் தவித்து வந்த சாமானிய மக்களுக்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு மிகப் பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளது.இனி வீடு மற்றும் வணிக கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி, கட்டிட அனுமதி பெற பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைவதற்கு அவசியமில்லை.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைன் மூலமாகவே அனுமதிகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசின் புதிய விதிகளின்படி:
- முதல் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
- ஆன்லைனில் விண்ணப்பித்த 5 வேலை நாட்களுக்குள் இடத்திற்கு நேரில் சென்று அதிகாரிகள் கள ஆய்வு முடிக்க வேண்டும்.
- மொத்த அனுமதி செயல்முறையும் 24 வேலை நாட்களுக்குள் முழுமையாக ஆன்லைன் மூலம் முடிக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரர்களிடம் அச்சிடப்பட்ட காகித ஆவணங்கள் அல்லது கூடுதல் நகல்களை அதிகாரிகள் கேட்கக் கூடாது.
- விண்ணப்பதாரர்களை அலுவலகத்துக்கு நேரில் வரச் சொல்லக் கூடாது. அவ்வாறு செய்தால் கடும் ஒழுங்கு நடவடிக்கை.
இந்த டிஜிட்டல் முறை மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வாழும் நடுத்தர மக்கள் இடைத்தரகர்கள் மற்றும் லஞ்ச அமைப்புகளின் தொல்லையின்றி தங்கள் மொபைல் போன் அல்லது கணினி மூலமாகவே அனுமதிகளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “நீண்டகாலமாக எதிர்பார்த்த சீர்திருத்தம் இது” என்று பலர் வரவேற்றுள்ளனர்.
இந்த நடவடிக்கை மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும், ஊழல் குறையும், மக்களின் நேரமும் பணமும் மிச்சமாகும் என்று முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் பலரது வீட்டு கனவு விரைவில் நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary : The Tamil Nadu government has introduced a new online system for building plan and construction approvals. Applications will be processed on a first-come-first-served basis. Site inspections must be completed within five working days and final approvals issued within twenty-four working days. No physical documents or office visits are required from applicants