மக்களை முட்டாளாக்கிய கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் குழு - கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்


மக்களை காக்க புறப்பட்ட கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து இயங்கி வந்தார். 

இது போதாது, மக்களை காப்பாற்றியே ஆகவேண்டும் என்று பிரபல தொலைகாட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி எப்படி ஒரே நாளில் காதலிப்பது, இரண்டாவது நாளில் கழட்டி விடுவது, எப்படி புறம் பேசுவது, பெண்கள் எப்படியெல்லாம் ஆபாசமாக உடையணிவது போன்ற சமூகத்திற்கும், மக்களுக்கும் தேவையான பல கருத்துகளை முன் வைத்து வருகிறார். 


ஒரு போட்டியாளர் தவறு செய்கிறார் என்றால் மக்கள் ஓட்டு போடாமல் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என்பது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. 


ஆனால், மக்களாவது, ஓட்டாவது என்று மக்களால் வெளியேற்றப்பட்ட ஒரு போட்டியாளரை மீண்டும் போட்டியாலாராக களத்தில் இறக்கி விட்டுள்ளது பிக்பாஸ் குழு. 

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரசிகர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவர் கமல்ஹாசனையும் பிக்பாஸ் குழுவையும் கிழித்து தொங்கபோட்டு வருகிறார்கள்.



Previous Post Next Post