பார்லே-ஜி பாப்பா யாரென்று தெரியுமா..? - இந்த புகைப்படத்திற்கு பின்னால் இவ்வளவு சர்ச்சையா..?


கிராமப்புற பெட்டிக்கடை முதல், மெட்ரோ நகரங்களின் மால்கள் வரை, எல்லா இடங்களிலும், எல்லாதரப்பு மக்களிடம் அறிமுகமான “பார்லே ஜி” கடந்த 65 ஆண்டுகளாக இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. 

பெட்டிக்கடைகளுக்கு ஏற்ப சின்னஞ்சிறு பிஸ்கெட்கள் கொண்ட 3 ரூபாய் பாக்கெட்டாகவும் கிடைக்கும். 100 ரூபாய் கொடுத்து, 1 கிலோ எடை கொண்ட பெரிய பாக்கெட்டாகவும் வாங்கலாம். 

இந்தியாவை சேர்ந்த பார்லே அக்ரோ புட்ஸ் நிறுவனம் 65 ஆண்டுகளாக பிஸ்கட் தயாரிப்பில் உள்ளது. இந்தியாவின் மொத்த பிஸ்கட் விற்பனையில் 60% பார்லே வசம் தான் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 


கடந்த ஆண்டு (2018) பார்லே-ஜி பிஸ்கட் மட்டும் இந்திய அளவில் 5300 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது . இது, பிஸ்கட் உலகில் புது சாதனை. காரணம், இந்த பிஸ்கட் சிறு கிராமங்களில் உள்ள பெட்டிக்கடை, கட்டில்கடைகள் முதற்கொண்டு பெரிய பெரிய நகரங்களில் உள்ளஎ மால்கள் வரை நமக்கு கிடைக்கும். 


கடந்த 60 ஆண்டுகளில் சந்தையில் பல நிறுவனங்கள் பல பிஸ்கட்டுகளை அறிமுகம் செய்திருந்தாலும். அவற்றுக்கெல்லாம் ராஜா-வாக நிற்கிறது பார்லே-ஜி. அறிமுகமான காலம் முதல் இன்று வரை இதன் சுவை மாறியதே இல்லை. மேலும், இதனுடைய மேல் கவரும் மாறியதில்லை. 90 களில் சக்திமான என்ற தொலைகாட்சி தொடரை வழங்கியதே இந்த பார்லே ஜி தான். 

இந்த பார்லே-ஜி பிஸ்கட்டின் கவரில் இருக்கும் குழந்தையின் பெயர் "நீறு தேஷ்பாண்டே" என்பதாகும். இவருக்கு இப்போது 70 வயது ஆகின்றது. தனக்கு 4 வயதாகும் போது தான் இந்த புகைப்படத்தை எடுத்தார்கள் என கூறியுள்ளார் நீறு தேஷ்பாண்டே. 

ஆனால், பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டில் அச்சிடதான் என்னை புகைப்படம் எடுத்தார்கள் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால், பார்லே நிறுவனம். அந்த குழந்தை முழுக்க முழுக்க கற்பனையாக வரையப்பட்டது தான் என்று கூறி அது நீறு தேஷ்பாண்டே இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். 

அந்த காலத்தில் புகைப்படத்தை தத்ரூபமாக பதிவிட்டால் ப்ரின்டிங் செலவு அதிகமாகும் என்பதால் தான் அந்த புகைப்ப்டத்தை ஓவியம் போல வரைந்து பிரிண்ட் செய்தார்கள் எனவும். 

ஒருவேளை, அது நீறு தேஷ்பாண்டே தான் என பார்லே நிறுவனம் ஒப்புக்கொண்டால் எங்கே காப்பி ரைட்ஸ் கேட்டு பணம் கேட்டுவிடுவரோ.? என்று பயந்து தான் பார்லே நிறுவனம் அது நீறு தேஷ்பாண்டே இல்லை என்று மறுக்கிறது எனவும் சிலர் கூறுகிறார்கள்.