பாகுபலி நாயகன் பிரபாஸ் திருமணம் செய்யவுள்ள பெண் இவரா.? - வரதட்சணை மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா....?


பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்துள்ளார். இம்மாதம் வெளியாகும் இந்த படத்தை சுஜீத் இயக்க, அவருடன் ஸ்ரத்தா கபூர், அருண்விஜய், நீல்நிதின் முகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பிரபாஸ்-அனுஷ்கா திருமண செய்தி கொளுந்துவிட்டு எரிந்தது.ஆனால் பின்னர் அவர்கள் இருவருமே அந்த செய்தியை மறுத்தனர். 


அதன்பிறகு வேறு பெண்ணை பிரபாஸ் மணக்கப்போவதாக சில பெண்களின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 


ஆனால் அது எல்லாமே வதந்தி என பிரபாஸ் தரப்பினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். இப்படியான நிலையில் தற்போது, பிரபாஸிற்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் சாஹோ படம் வெளியானதும் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போது நம்ப தகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. 

பிரபாஸின் மாமா மற்றும் சகோதரியும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், மிகப்பெரிய தொழிலதிபரான அந்த அமெரிக்கரின் பூர்விகம் தெலுங்கானா தானாம். இந்த திருமணத்தின் மூலம், பிரபாஸிற்கு வரதட்சணை மட்டுமே 3000 கோடியை தாண்டும் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல் ஒன்றும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது.


Previous Post Next Post
--Advertisement--