பிக்பாஸ் வனிதா-வா..? முடியாதுப்பா சாமி..? என்ற நிலைக்கு வந்துவிட்டனர் பிக்பாஸ் ரசிகர்கள். பிக்பாஸ் வீட்டில் நான் நானாக நடந்துகொள்கிறேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் போட்ட ஆட்டடம் கொஞ்சமா..? நஞ்சமா..? மற்றவர்கள் பிரச்சனையில் வம்படியாக சென்று மூக்கை நுழைப்பதும். தன்னுடைய பிரச்னையில் யாரவது தலையிட வந்தால்.. நான் உங்களிடமா பேசுகிறேன்.. உங்களுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை என மற்ற போட்டியாளர்களை தொடர்ந்து அடக்கி வந்தார் வனிதா.
இதனால், இரண்டாவது ஆளாக அவரை வெளியே அனுப்பியும் விட்டனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு பேட்டியில், என் வாழ்க்கையில் எனக்கு இரண்டு விவாகரத்துகள் நடந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் நான் அதை யாரிடமிருந்தும் மறைக்கவில்லை, அதற்காக நான் வெட்கப்படவில்லை. எனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த சில மீம்ஸ்களை நான் கண்டேன்.
இது எனது தனிப்பட்ட விவகாரம், அதைப் பற்றி எதுவும் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஒருவர் வாழ்கையில் விவாகரத்து என்பது சர்வ சாதரணமாக நடக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். அதற்கான காரணங்கள் மட்டும் அந்தந்த ஜோடிகளுக்கு ஏற்ப வேறுபட்டிருக்கலாம்.
எல்லோருக்கும் நிச்சயம் ஒரு வாழ்கைத்துணை தேவை. நீங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நபர் இல்லாமல் உங்கள் வாழ்க்கையை வாழ்வது கடினம்.
அவ்வளவு ஏன், இப்போது ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இது, அவர்களுக்குள் ஏற்படும் ஒற்றுமையை பொருத்தது. நமக்கு ஒரு துணை இருக்கிறார் என்றால் அது உடலுறவு சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற அவசியமா என்ன..?. ஒரு நபர் அவரது துணையை விவாகரத்து செய்ததை வைத்து அவர்களை இழிவுபடுத்த முயற்ச்சிப்பது நியாயமற்றது. என்று கூறியுள்ளார் வனிதா.
Tags
Vanitha Vijaykumar