தளபதி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறிய சோபா சந்திரசேகர் - நடிகை திரிஷா பதிலடி..!


தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தளபதியின் அடுத்த படத்திற்க்கான அறிவிப்பும் வெளியாகி விட்டது. 


அடுத்த மாதம் இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தளபதி 63 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. 


இந்நிலையில், நடிகர் விஜய்யின் தாயார் எழுதிய கடிதம் ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது. இதில், தியாரகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்,ரஜினி வரிசையில் சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கின்றது என கூறியிருந்தார். 




இந்நிலையில், இன்று நடிகர் திரிஷா யூனிசெஃப் சார்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம், அதற்கான வலுவான சட்டம் தேவை.

அவர்களின் உரிமை பற்றி கூடுதல் விழிப்புணர்வு வேண்டும், கிராம பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அஜித் ஒரு சூப்பர் ஸ்டார், நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என அவர் கூறினார். 

இதனை கேட்ட ரசிகர்கள், நேற்று ஷோபா சந்திரசேகர் அவர்கள் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியதற்கு பதிலடியாக்தான் நடிகை திரிஷா இன்று அஜித்தை சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Previous Post Next Post