நான் ஒரு கஞ்சா அடிமை - மேடையிலேயே கூறிய பிரபல தமிழ் இயக்குனர் - இவரா இப்படி.? - ரசிகர்கள் ஷாக்


இன்றைய காலகட்டத்தில் போதை பழக்கம் பல்வேறு விதங்களில் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது. அதை ஒழிக்க வேண்டும் என சமீபத்தில் நடைபெற்ற ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார் அந்த இயக்குனர். 

மேலும், இளம் வயதில் நானும் கஞ்சா அடித்ததாக மேடையிலேயே கூறியுள்ளார். இதனால் மேடையில் இருந்தவர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். 

தொடர்ந்து பேசிய அவர் "ஆம், இளம் வயதில் நானே நிறைய முறை கஞ்சா அடித்திருக்கிறேன். எனக்கு சிகரெட்டுல கலந்து கொடுத்தார்கள். அதற்கு அடிமையான நான் அந்த பழக்கத்தை தொடர்ந்து வந்தேன். 


ஆனால், ஒரு கட்டத்தில்ஏதோ சாதிக்க நினைத்தோம்.. இப்படி போதையில் இருக்கிறோமே' என தோன்றியது அதனை தூக்கி எறிந்துவிட்டு வாழ்கையில் பயணிக்க ஆரம்பித்தேன் நல்ல படங்களை கொடுத்தேன் 


இப்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்று கூறிய அவர். புத்தருக்கு போதி மரம் எப்படி வாழ்கையை காட்டியதோ. அதே மாதிரி எனக்கு போதை மரம் தான் வாழ்கையை காட்டி புத்தி கொடுத்தது. என கூறியுள்ளார். 

அதெல்லாம் சரி, அந்த இயக்குனர் யாருன்னு சொல்லுங்கப்பா என்று கேட்கிறீர்களா..? வெறு யாரும் அல்ல நம்ம பாக்யராஜ் தான்.

Advertisement