விக்ரம் வேதா வெற்றிக்கு பின், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு, தமிழில் அதிக வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும், கதையை தேர்வு செய்து, அது, தனக்கு பிடித்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.
தற்போது, அஜித்துடன், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார், ஷ்ரத்தா.படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், 'நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்காக, தொலைபேசியில் அழைத்தனர். இதற்காக ஆடிசனும் வைத்தனர்.

ஆடிசன் முடித்து பல நாட்கள் ஆகியும், எந்த விபரமும் தெரியவில்லை. மூன்று வாரம் கழித்து, மீண்டும் அழைத்தனர். சில காட்சிகளை படமாக்கினர்.''அதன் பின் இயக்குனர் வினோத் என்னிடம் வந்து, 'இந்த காட்சியில் நீங்கள் நடிக்கும் போது, ரசிகர்கள் உங்களை வெறுக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்ற ஒரு விஷயத்தை சொன்னார்.
அதன் பிறகு தான் முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்தேன். அதனால் தான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க தேர்வானேன். மேலும், அஜித் உடன் நடித்த அனுபவம் இனிமையானது. மிகவும் நல்ல மனிதர்.
அடுத்ததாக விஷால் உடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். மாதவன் உடன், மாறன் படத்தில் நடிக்கிறேன். இப்போது, நான் ரொம்ப, 'பிசி' தெரியுமா,'' என்று சிலாகிக்கிறார் ஷ்ரத்தா.
Tags
Shraddha Srinath