நீங்கள் விஜயுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறிய ரசிகர் - பார்த்திபன் கூறிய பதிலை பாருங்க..!


தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர் மற்றும் நடிகர்களில் ஒருவராக உள்ள பார்த்திபன், தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டு பயணிப்பவர். 

அவர் இயக்கும் படங்கள், பேசும் வசனங்கள் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் வித்தியாசத்தை கடைபிடித்து வருகிறார். தற்போது, ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற தலைப்பில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுவதும் வருவது போன்ற வித்தியாசமான படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருக்கிறார். 


இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமஷன் வேளைகளில் பிசியாக இருக்கும் பார்த்திபன் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். 


அப்போது, ஒரு ரசிகர் நீங்கள் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும். இது எனது ரொம்ப நாள் ஆசை என்று கூறினார். இதனை பார்த்த பார்த்திபன், ஆம், எனக்கும் ரொ.நா ஆசை.! என்று தனக்கே உரிய பாணியில் பதில் கூறியுள்ளார்.