"பிகில்" டீசர் ரிலீஸ் - வெளியான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..!


தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 

இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிக அதிக தொகைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து வாங்கியுள்ளது. 


இந்நிலையில், இந்த படத்தின் தீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சென்சார் போர்டின் உறுப்பினர் உமர் சந்து என்பவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் " பிகில் டீசர் சென்சார் செய்யப்பட்டு விட்டது. மிகவும் அருமையாக வைத்துள்ளது. விரைவில் வெளியாகும்" என கூறியுள்ளார். 

அநேகமாக, பாடல்கள் ரிலீஸ் ஆகும் போது படத்தின் டீசரையும் சேர்த்தே வெளியிடுவார்கள் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.