சற்று முன் : சிங்கப்பெண்ணே பாடல் படைத்த இமாலாய சாதனை - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்


இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இந்தப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முழுவதுமாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது. 


பிகில்’ படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியாகின.இதற்கிடையே பிகில் படத்தின் 'சிங்கப்பெண்ணே' எனத் தொடங்கும் பாடல் சமூக வலைதளங்களில் கசிந்தது. 


பின்னர், 'சிங்கப்பெண்ணே' பாடலை அதிகாரபூர்வமாக கடந்த 23ம் தேதி வெளியிட்டது படக்குழு.இந்தபாடல் வெளியாகி இன்றுடன் 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சற்று முன் 1 கோடி பார்வையாளர்களை பெற்று மிரட்டலான சாதனையை படைத்துள்ளது இந்த சிங்கப்பெண்ணே பாடல்.