தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் - லேட்டஸ்ட் பட்டியல்


தமிழ் சினிமா நடிகர்களில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலை, விவரம் அறிந்த சினிமா வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.


அப்படி அவர்கள் கூறிய நம்ப தகுந்த தகவலின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நடிகர் சிம்பு 8 கோடி என்ற அளவில் சம்பளமாக பெற்று பத்தாவது இடத்தை பிடிக்கிறார்.
 
தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி 8 முதல் 10 கோடி வரை சம்பளம் பெற்று ஒன்பதாவது இடத்தை தனதாக்கியுள்ளார். முறையே, நடிகர் தனுஷ், கார்த்தி ஆகியோர் 10 முதல் 12 கோடி என எட்டாவது இடத்தையும், 15 கோடி சம்பளம் பெற்று நடிகர் சிவகார்த்திகேயன் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


நடிகர் விக்ரம் 20 கோடி ரூபாய் சம்பளத்துடன் ஆறாவது இடத்திலும், 22 கோடி ரூபாய் சம்பளம் பெற்று சூர்யா ஆறாவது இடத்திலும், 30 கோடி சம்பளம் பெற்று நடிகர் கமல்ஹாசன் நான்காவது இடத்திலும் நிற்கிறார்கள்.

அதனை தொடர்ந்து, நடிகர் தல அஜித்குமார் 35 முதல் 40 கோடி சம்பளம் பெற்று மூன்றாவது இடத்தை ரிசர்வ் செய்துள்ளார். நடிகர் விஜய் 45 முதல் 50 கோடி சம்பளமாக பெற்று இரண்டாவது இடத்தில் கெத்து காட்டுகிறார். 

முதலாவது இடத்தில் யார் என்று சொல்ல வேண்டுமா என்ன...? - ஆம், அவரே தான்..! 60 முதல் 65 கோடி வரை சம்பளம் பெற்று முதலிடத்தில் முடி சூடா மன்னனாக நிற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.