தமிழில் "கோ" படத்தின் மூலம் அமளி துமளி நெளியும் வேலி என அறிமுகமானார் நடிகை கார்த்திகா நாயர்.
இவரது, மைனஸ் பாய்ண்டே இவரது உயரம் தான். நடிகை அனுஷ்கா அளவுக்கு உயராமாக உள்ள இவருக்கு அதற்கேற்ற உடல் வாகு இல்லை. ஒல்லிப்பிச்சான் போல இருப்பதால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போனது.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். கோ படத்தை தொடர்ந்து இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த 'அன்னகொடி' , 'புறம்போக்கு என்கிற பொது உடமை' ஆகிய படங்கள் படு தோல்வி அடைந்தன.
அதன் பிறகு, தமிழ் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார். இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் 'வா டீல்' படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்குண்டான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
இப்போது, விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.