பீச்சு பக்கம் டப்பாங்குத்து - முன்னணி இளம் நடிகைக்கு விரைவில் திருமணம் - குடும்பத்தினர் தீவிரம்


ஒரே ஒரு மலையாள படத்தில் டீச்சராக நடித்ததன் மூலம் இந்தியா முழுதும் பல மொழி ரசிகர்களிடம் வைரலனார் அம்மணி. நடிகைகளின் வீடியோ கிளிப்புகள் தான் வைரலாகும். ஆனால், ஒரு படமே வைரலானது அது தான் முதல் முறை.

அதனை தொடர்ந்து, அந்த டீச்சர் நடிகைக்கு ஏக வரவேற்பு. தெலுங்கு சினிமாவில் ஒரு கலக்கு கலக்கினார். தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ரகம். 

ஆனால், தமிழில் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். ஒரு வழியாக தமிழிலுக்கு ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் சில திரையரங்குகளில் மேட்னி ஷோ கூட எட்டவில்லை. செம்ம அடி வாங்கியது. 

அதன் பிறகு, இரண்டு தமிழ் படங்களில் நடித்தார். அந்த படங்களும் பப்படம் ஆகிப்போனது. தமிழ் செட் ஆகாது என்று தெலுங்கிற்கு மீண்டும் சென்றார். ஆனால், அங்கும் செல்ஃப் எடுக்கவில்லை. இதற்கு நடுவில் இவருடன் நடித்த இளம் நடிகர்கள் இருவர் நடிகை மீது திமிர் பிடித்தவர் என்ற முத்திரை குத்தி அம்மணியின் இமேஜை கிழித்து விட்டனர். 

சமீபத்தில் கூட மருமகன் நடிகருடன் ஒரு படத்தில் நடித்தார். படம் ஹிட் ஆகியதோ இல்லை அந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் உலகம் முழுதும் ரீச் ஆகியது. நிலைமை இப்படி இருக்க, அம்மணிக்கு திருமணம் செய்து வைக்க தீவிரம் காட்டி வருகிறார்கள் குடும்பத்தினர். 

இந்த வருடமே திருமணம் நடத்தி வைக்க வீட்டார் ஏற்பாடு செய்து வருகிறார்கள். மாப்பிள்ளை பட்டியலில் கேரளாவை சேர்ந்த மருத்துவர் ஒருவரும், தெலுங்கானாவை சேர்ந்த முன்னணி இளம் நடிகர் ஒருவரும் உள்ளனர். இருவரில் யார் மாப்பிள்ளை என்ற விபரம் விரைவில் தெரிந்து விடும். 

ஆனால், சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டிய பொண்ணுக்கு ஏன் இப்படி அவசர அவசரமாக திருமணம் என்று விசாரித்த போது பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மருமகனின் பெயர் பெரிய அளவில் அடிபடுகிறது.
Previous Post Next Post
--Advertisement--