பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளர்.
இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, அருண் விஜய், ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரான இந்தப் படத்தை ஒரே ஒரு படத்தை இயக்கியுள்ள புதுமுக இயக்குனர் சுஜீத் எழுதி இயக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் நேற்று திரைக்கு வந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
எனினும் பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியும் பிரபாஸ் மீதான எதிர்பார்ப்பும் சாஹோ படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. இதனால் முதல் நாள் வசூலில் படம் கொடி கட்டிப் பறந்தது.
ஆனால், இரண்டாவது நாளில் அப்படியே பாதியாக வசூல் குறைந்தது. முதல் நாள் 130 கோடி வசூல் செய்த இந்த படம் இரண்டாம் நாளில் வெறும் 75 கோடிகளை மட்டுமே வசூலித்து. அதுவும் சனிக்கிழமை விடுமுறை தினம். மேலும், நேற்று ஞாயிற்றுகிழமை 74 கோடி ரூபாய்களை வசூல் செய்து மொத்தம் 279 கோடி ரூபாய்களை 3 நாளில் வசூல் செய்துள்ளது. படத்தின் பட்ஜெட்டை தொடவே இன்னும், 71 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.
470 கோடி ரூபாய் வசூல் செய்தால் மட்டுமே படத்தினால் யாருக்கும் லாபமும் இல்லை, நட்டமும் இல்லை என்ற நிலைக்கு வர முடியும் என்ற நிலையில் முதல் மூன்று நாட்களில் வெறும் 279 கோடி ரூபாய்களை மட்டுமே வசூலித்துள்ளது சாஹோ. இது தயாரிப்பாளருக்கு கஷ்டம் என்று ஒரு பக்கம் இருந்தாலும், பிரபாஸ் ரசிகர்களை வெகுவாக சோகத்தில் ஆழத்தியுள்ளது.
Tags
Saaho movie