நடிகை பூர்ணா (aka) ஷாம்னா காசிம் இப்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். சமீபத்தில், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய ப்ளூவேல் என்ற கேமின் கதை தான் இந்த படம். தலைப்பு கூட "ப்ளூ வேல்" தான்.
நடிகர் ரேவதியையும், அசினையும் மிக்சியில் கலந்தடித்து போல இருக்கிறார் பூர்ணா என்று ஆரம்ப காலத்தில் இவரை பலரும் புகழ்ந்தனர். படங்களில் நடிக்க நடிக்க ரேவதி, அசின் ஆகியோருடன் குஷ்புவையும் தன்னுள் கலந்து கொண்டு குண்டாகிவிட்டார் அம்மணி.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காததால் சினிமாவில் வளரும் வாய்பை இவர் பெறவில்லை. ஆனால், ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகும் அளவுக்கு இவரது வளர்ச்சி இருக்கிறது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி வெளியிடும் பழக்கம் உடைய இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.