நடிகர் விஜய் - இயக்குனர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது.
நடிகர் விஜய் இதில் பேசிய விஷயங்கள், அரசியல் கருத்துக்கள் பெரிய வைரலாகி உள்ளது.அதேபோல் பிகில் படத்தின் முக்கிய விஷயங்கள், கருத்துக்கள், கதையின் முக்கிய அம்சங்கள் குறித்த விஷயங்களும் இந்த விழாவில் வெளியானது.
விழாவிற்கு முன்பாகவே விழா நடக்கும் சாய் ராம் கல்லூரிக்கு வெளியே பயங்கரமான கூட்டம் கூடியது. இதனால் பெரிய அளவில் அங்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டது. அந்த சாலை பகுதியே இதனால் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு ஸ்தம்பித்தது.
இதனால் விழாவிற்கு விஜயின் அப்பா சந்திரசேகர் வருவதற்கே நீண்ட நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த விழாவிற்கு மொத்தம் 20 ஆயிரம் பேர் வரை வந்திருந்தனர். பல ஊர்களில் இருந்து டிக்கெட் வாங்கி, இந்த விழாவிற்கு ரசிகர்கள் வந்திருந்தனர்.
ஆனால் வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே இந்த விழாவை பார்க்க முடியும் என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் போலீசார் உடன் ரசிகர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் விழா அரங்கத்திற்கு வெளியே போலீசாருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன்பின் அந்த சாலையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். மேலும், சில ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி ஓடவிட்டுள்ளனர்.
பல ரசிகர்களின் முட்டிக்கு கீழே லத்தியால் கடுமையாக தாக்கி ஊட விட்ட சம்பவங்களும் நடந்தன. ஒரு ரசிகரின் வலது பக்க கண் வீங்கும் அளவுக்கு அடிபட்டுள்ளது.
மேலும், பெண் ரசிகைகள் மீதும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தயாரிப்ப்பாளர் குழு மீது விஜய் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
10 ஆயிரம் பேர் மட்டும்தான் வர முடியும் என்றால், ஏன் 20 ஆயிரம் பேருக்கு டிக்கெட் கொடுக்கிறார்கள். இது என்ன ரசிகர்களை ஏமாற்றும் வேலையா..? நாங்க அடி வாங்க தான் இங்க வந்தோமா..? என்று ரசிகர்கள் பலரும் கோபம் அடைந்து இருக்கிறார்கள்.
இது குறித்து வலது கை மற்றும் மார்பு பகுதியில்விஜய்யின் பெயரையும்', உருவத்தையும் பச்சை குத்தியுள்ள வெறித்தனமான ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்யை ஆபாச வார்த்தைகளால் திட்டி சாடியுள்ளார். அந்த வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.