பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முதற்பாதியில் புள்ளை பூச்சியாக இருந்து பிற்பாதியில் காட்டு பூச்சியாக மாறியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறியப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து, மகத், ஆரி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அலேகா, கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் இருந்து முரட்டு குத்து நடிகை யாஷிகாவும், ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். இருவரும் படம் நடிகிரார்களோ இல்லையோ..? ஜோடி போட்டுக்கொண்டு ஊர் சுற்றி வருகின்றனர்.
சமீபத்தில், தங்களது நட்பு ஒரு ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 வீட்டுக்குள் வந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
மய்யா மய்யா பாடலுடன் என்றியாகும் அவர் பிக்பாஸ் வந்த பிறகு தான் எனக்கு ஐந்து படங்கள் வந்துள்ளது. நன்றி பிக்பாஸ் என்று அட்ராசிட்டி செய்கிறார். இதோ அந்த ப்ரோமோ
#Day96 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/CPTXODINNY— Vijay Television (@vijaytelevision) September 27, 2019



