இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "பிகில்". இந்த படத்தின் நடிகர் விஜய் அப்பா, அம்மா என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
என்னடா..?? படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரெண்டு மாசம் ஆவுதே இன்னும் ஒரு பிரச்சனை கூட வரலியே என்று தான் பலரும் நினைத்திருப்பார்கள். காரணம், விஜய் படங்கள் என்றாலே சர்ச்சை எங்கிருந்தான் வருமோ என்று தெரியாது. ஏதாவது, ஒரு பிரச்சனை.
இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எங்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. இதனால், பிகில் படக்குழு அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று மீன் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இப்போது இந்த சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மீன் வியாபாரிகள், இதர அனைத்து இறைச்சி வியாபாரிகளும் அதிகாலை தொட்டு வணங்கி தொழில் செய்யும் முட்டி, கத்தி மீது செருப்புக்கால் வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளை செறுப்பால் அடித்த உணர்வை ஏற்படுத்து விட்டீர்கள் அந்தக் காட்சியோடு படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.
இதைச் சுட்டிக்காட்டி ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும், இயக்குநர் அட்லீக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் நோட்டீசாக ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் செருப்புக் காலால் முட்டி, கத்தியை மிதித்து போஸ்டர் வெளியிட்ட காட்சியை நியாயப்படுத்தியும், அந்த காட்சியை நிக்க மறுத்தும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்தியாவில் உள்ள மொத்த இறைச்சி வியாபாரிகளையும் கொச்சைப்படுத்தும் பிகில் திரைப்படத்தில் அந்தக் காட்சி சம்பந்தப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்க வந்த கறிக்கடை உரிமையாளர்கள் பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.