விஜய் குட்டி கதையை காப்பியடித்த விவகாரம் - பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அதிரடி பதில்


பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை காப்பியடிக்கப்பட்ட ஒன்று என்று சர்ச்சை எழுந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 

சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்த இந்த விழாவில் விஜய் பேசிய விஷயங்கள், அரசியல் கருத்துக்கள் எல்லாம் பெரிய வைரலானது. இந்த விழாவில் நடிகர் விஜய் குட்டி கதை ஒன்றை கூறினார். 

அதில் யாரை எந்த இடத்தில் உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் உட்கார வைக்க வேண்டும். ஒரு பூக்கடையில் வேலை பார்த்த சிறுவனை வெடி கடையில் அமர வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது சிக்கலாகிவிடும் என்று கூறினார். 

ஆனால், விஜய் பேசிய அதே விஷயத்தை ஏற்கனவே பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர் அப்படியே பேசியிருந்தார். இதனை தொடர்ந்து,நடிகர் விஜய் அந்த கதையை அப்படியே காப்பியடித்து விட்டார் என கலாய்த்து வந்தனர் ஒரு தரப்பு ரசிகர்கள். 

இதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில், பிரபல செய்தி சேனலான நியூஸ் 7 அந்த பட்டி மன்ற பேச்சாளரிடம் இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்டது. அதற்கு பதில் அளித்த அவர், " நான் விஜய்யின் தீவிர ரசிகை. நடிகர் விஜய் அப்படி பேசியது தற்செயலாக நடந்த ஒன்றாகவே நான் பார்கிறேன். நானும் எங்கேயோ படித்த, கேட்ட ஒரு விஷயத்தை தான் கூறினேன். நடிகர் விஜய் என்னை விட அருமையாக அந்த திருக்குறளை கூறியிருந்தார் என்று அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.

Advertisement