ஒரே மணி நேரத்த்தில் 1 மில்லியன் லைக்ஸ் - யூ-ட்யூப் சாதனைகளை செஞ்சிவிட்ட விஜய் ரசிகர்கள்..!


ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் பிகில் படத்தில் நடிகர் விஜய் , இயக்குனர் அட்லி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். 

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 2நிமிடம் 41 விநாடிகள் நீளம் கொண்ட இந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும், அட்லீயின் கலர்ஃபுல்லான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக நேற்று முதலே இதற்கான ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ட்ரெய்லர் வெளியாகி வெறும் ஒரே மணி நேரத்தில் 1 மில்லயன் லைக்குகள் பெற்றுmமுந்தைய யூ-ட்யூப் சாதனைகளை தவிடு பொடியாக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.