இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படம் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்தது.
இந்நிலையில், நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம்
எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த
படம் உருவாகி வருகிறது.
அஜித் நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தற்போது
இதை தல 60 என்று மட்டும் அழைத்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜித் போலீஸ் மற்றும் ரேஸர் கதாபத்திரத்தில் நடிக்கிறார்.
நேற்று மாலை படக்குழு தரப்பில் இருந்து எச்சரிக்கை பதிவு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, தல 60 படத்தில் நடிக்க நடிகர்,நடிகைகளை தேர்வு செய்ய நாங்கள் எந்த ஆடிஷனையும் நடத்த வில்லை. எந்த ஏஜென்சியிடமும் கேட்கவும் இல்லை.
கடந்தசில நாட்களாக தல 60 படத்தில் நடிக்க ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என போலியான தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அவை எதுவும் உண்மையில்லை. அப்படியான போலியான செய்தியை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Caution Notice pic.twitter.com/Iu5LG5bMwZ— Boney Kapoor (@BoneyKapoor) October 10, 2019