கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் உத்தமபுத்திரன் பட நடிகை சுரேகா வாணி..! - வைரல் புகைப்படங்கள்


சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். 

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,காதலில் சொதப்புவது எப்படி ,எதிர்நீச்சல் ,மெர்சல் ,விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். 

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்துக்கொண்ட இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.