இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள "பிகில்" திரைப்படம் வெளியாகி கலைவையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், இந்துஜா, அமிர்தா, ரெபோ மோனிகா, வர்ஷா, இந்திரஜா உள்பட பலர் கால்பந்தாட்ட வீராங்கணைகளாக நடித்தனர். இவர்களில் இந்திரஜா, காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் ஆவார்.
உடல் பருமனாக இருக்கும் அவரை இந்த படத்தில் ஒரு காட்சியில் குண்டம்மா குண்டம்மா என்று சொல்லி திட்டுவார் விஜய். உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்த விஜய்க்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்து சர்ச்சையானது இந்த விவகாரம்.
இந்த நிலையில், இந்திரஜா அளித்த ஒரு பேட்டியில், என்னை குண்டம்மா என்று சொல்வதற்கு விஜய் தயங்கினார். படத்தின் காட்சிக்கு அந்த வசனம் தேவைப்பட்டதால் அப்படி நடித்தார். நானும் எந்தவித சங்கடமும் இல்லாமல் இயல்பாகவே நடித்தேன்.
ஆன போதும், அந்த காட்சியில் நடித்த பிறகு அவர் என்னிடம் வந்து குண்டம்மா என்று சொல்லி நடித்ததற்கு அப்போதே மன்னிப்பு கேட்டார் என தெரிவித்துள்ளார்.