எல்லா ஸ்க்ரீனிலும் "பிகில்" தான் - அறிவித்த பிரபல மல்டிஃப்ளக்ஸ் திரையரங்கம்


தீபாவளி பண்டிகைக்கு மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. 

அதில் "பிகில்" படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக அதிக தியேட்டர்கள் இந்த படத்திற்கு தான் கிடைக்க வாய்ப்புள்ளது. 

சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகினி திரையரங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு வாரத்திற்கு பிகில் படம் மட்டுமே திரையிடுவோம் என தெரிவித்துள்ளனர்.

வாவ்.. பிகில் படம் ரோகினி அரங்கில்pபுதிய சாதனை படைக்க போகின்றது என விஜய் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆனால், அதே நேரம் மல்டிஃப்ளக்ஸ் என்பதே ரசிகர்களுக்கு எந்த படம் பார்க்கலாம் என்று தேர்வு வாய்பை கொடுப்பது தான். ஆனால், ஒரே படத்தை தான் போடுவேன் என்பது ஓரவஞ்சனை. மற்ற படங்களை தயாரித்தவர்களை மறை முகமாக மிரட்டுவது போன்றது இது. என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள.