விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி வெளியீடு என்பதால் எப்போது ட்ரெய்லர் வெளியீடு எனப் பலரும் எதிர்நோக்கியுள்ளனர்.
ட்ரெய்லர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும், படக்குழு அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு 'பிகில்' ட்ரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு பிரபல யூ-ட்யூப் சேனலில் வெளியாகும் பிகில் படத்தின் ட்ரெய்லர் லிங்க் இதோ,