Posts

Showing posts with the label Bigil Trailer

வெளியானது "பிகில்" ட்ரெய்லர் லிங்க் - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

Image
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி வெளியீடு என்பதால் எப்போது ட்ரெய்லர் வெளியீடு எனப் பலரும் எதிர்நோக்கியுள்ளனர்.  ட்ரெய்லர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும், படக்குழு அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு 'பிகில்' ட்ரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு பிரபல யூ-ட்யூப் சேனலில் வெளியாகும் பிகில் படத்தின் ட்ரெய்லர் லிங்க் இதோ,

"பிகில்" ட்ரெய்லர் - தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் செய்ததை பாருங்க..! - வீடியோ உள்ளே

Image
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை ஆறு மணியிக்கு வெளியாக உள்ளது.  இது குறித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்.  ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”நாளை வெளியாகும் ‘பிகில்’ டிரெய்லர் எத்தனை நிமிடங்கள் ஓடக் கூடியதாக இருக்கும் யூகியுங்கள்…?” என ஒரு கேள்வியை கேட்டிருந்தார் அதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 பேர் வாக்களித்துள்ளனர். இறுதியாக ட்ரைலர் 2 நிமிடம் 30 வினாடிகள் ஓடக்கூடியது என அறிவித்தார் கல்பத்தி அர்ச்சனா. இதனை தொடர்ந்து, இன்று மாலை வெளியாகும் பிகில் ட்ரெய்லரை நேரடியாக பெரிய திரையில் ஒளிபரப்பு செய்ய பிரபல திரையரங்கள் ஒன்று முடிவு செய்து அதற்க்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் படி அந்த கொண்டாடத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த திரையரங்கின் முன்பு திரண்டு ஆரவாரம் செய்து வருகின்றனர். இதோ அந்த காட்சிகள்,

வெளியானது அனல் பறக்கும் "பிகில்" ட்ரெய்லர் - ரசிகர்கள் ஆரவாரம் - இதோ ட்ரெய்லர்..!

Image
அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இன்று மாலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி சற்று முன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை ஏற்றுக்கொண்டிருகின்றது. மேலும், வரும் 20-ம் தேதி முதல் தொலைக்காட்சி ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகும் என படகுழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.