அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை ஆறு மணியிக்கு வெளியாக உள்ளது.
இது குறித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்.
‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”நாளை வெளியாகும் ‘பிகில்’ டிரெய்லர் எத்தனை நிமிடங்கள் ஓடக் கூடியதாக இருக்கும் யூகியுங்கள்…?” என ஒரு கேள்வியை கேட்டிருந்தார் அதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 பேர் வாக்களித்துள்ளனர்.
இறுதியாக ட்ரைலர் 2 நிமிடம் 30 வினாடிகள் ஓடக்கூடியது என அறிவித்தார் கல்பத்தி அர்ச்சனா. இதனை தொடர்ந்து, இன்று மாலை வெளியாகும் பிகில் ட்ரெய்லரை நேரடியாக பெரிய திரையில் ஒளிபரப்பு செய்ய பிரபல திரையரங்கள் ஒன்று முடிவு செய்து அதற்க்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன் படி அந்த கொண்டாடத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த திரையரங்கின் முன்பு திரண்டு ஆரவாரம் செய்து வருகின்றனர்.
அதன் படி அந்த கொண்டாடத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த திரையரங்கின் முன்பு திரண்டு ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இதோ அந்த காட்சிகள்,