‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், நடிகை நமீதா. ‘ஏய்’, ‘இங்கிலிஸ்காரன்’, ‘சாணக்யா’, ‘பச்சக்குதிர’, ‘நான் அவன் இல்லை’ உள்பட பல படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் இளைஞர்களை கிறங்கடித்தார்.
‘மச்சான்’ என்று ஆசையோடு அழைத்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். கடந்த 2017–ம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை நமீதா திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில், வடிவுடையான் இயக்கும் ‘பொட்டு’ என்ற திகில் படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், நமீதா தனது கவர்ச்சி புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இடையில் உடல் எடை ஏறி குண்டானார் அம்மணி. அதனால், ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாட். மேலும் ‘ஜிம்’மில் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது போலவும்புகைப்படங்களை வெளியிட்டார்.
உடல் எடை குறைத்துள்ள அவர் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பு தெரியும் படி செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றி வருகிறார். இந்த படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags
namitha