ஒன்று அல்லது இரண்டு தியேட்டர் என்றால் ஓகே..! - ஒரு மாவட்டமே "பிகில்" படத்தை புறக்கணித்த கதை..!


இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள 'பிகில்' படம் இந்த வாரம் அக்டோபர் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை விஜய்யின் முந்தைய படங்களின் விலையை விட அதிக விலை கொடுத்து வினியோகஸ்தர்கள் வாங்கி இருக்கிறார்களாம். 

அதனால், படத்தை வெளியிட விரும்பும் தியேட்டர்காரர்களிடம் அதிக விலையை கேட்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 

இதனால், வழக்கமாக விஜய் படங்களை வெளியிடும் சில தியேட்டர்களும், புதிய படங்களை வெளியிடும் தியேட்டர்களும் 'பிகில்' படத்தைப் வாங்காமல் பின் வாங்குவதாக தகவல்கள் வெளிவருகின்றன. 

கரூர் மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் கூட இதுவரை "பிகில்" படத்தை வாங்கவில்லை. வாங்கப்போவதும் இல்லை கரூர் தியேட்டர் உரிமையாளர்கள் ஒன்று கூடி தீர்மானம் போட்டுள்ளார்கள். காரணம் அதிக விலை தான்.

மேலும், 'பிகில்' படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு ஆரம்பமான தியேட்டர்களில் ஆன்லைன் முன்பதிவில் வழக்கத்தை விட அதிகமான கட்டணம் வாங்குவதாக பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். 

இவற்றை அரசு நிர்வாகம் கவனித்து அதிக விலைக்கு டிக்கெட்டை விற்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும்பரவலாக எழுந்து வருகின்றது.