குழப்பி விட்ட "பிகில்" ட்ரெய்லர் - மண்டையை பிச்சிக்கும் ரசிகர்கள்..!


நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகயுள்ள "பிகில்" படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இந்த டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 

இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், 62 நிமிடம் கிட்டதட்ட ஒரே மணிநேரத்தில் 1 மில்லியன் லைக்குகளையும் இந்த பிகில் படத்தின் டிரைலர் யூடியூபில் பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘பிகில்’ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. 

ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே ட்ரெய்லர் பட்டய கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்டமான பின்னணி இசைதான்.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களை சற்றே குழப்பி விட்டுள்ளது. அது, படத்தில் மொத்தம் எத்தனை விஜய் என்பது தான். ஒரு காட்சியில் அப்பா விஜய் பேசும் வசனமான "இதெல்லாம் யாராலா... ராயப்பன்-னாலயா..? மைக்கேல்-னாலயா..? பிகிலே.....!" என்ற வசனம் தான் இந்த குழப்பத்திற்கு காரணம்.

ராயப்பன், மைக்கேல் என இரண்டு வேடங்கள் தான் என தகவல்கள் வந்திருந்த நிலையில் பிகில் என்பவர் தனியாக இன்னொரு கதா பாத்திரமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

மேலும், ராயப்பன் மற்றும் மைக்கேல் இருவரும் வேறு வேறு இல்லை இருவரும் ஒரே கதாபாத்திரம் மைக்கேல் ராயப்பன் என்ற ஒரு கதாபாத்திரம் தான் இளவயது மற்றும் வயதான என இரண்டு பாத்திரங்களில் காட்டப்பட்டுள்ளது என கூறுகிறார்கள். 

எது உண்மை என இன்னும் இரண்டு வாரங்களில் தெரிந்து விடும்.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்