விஜய் படம் என்றால் இப்படியான பிரச்னைகளை தாண்டி தான் வரவேண்டியுள்ளது. இந்த ஒரு வரியை விஜய் பட ரிலீஸ் சமயங்களில் எல்லா பத்திரிகைகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது தான் உண்மை.
கடந்த பத்து ஆண்டு காலமாக விஜய் படங்கள் என்றாலே சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகின்றது. இந்நிலையில், விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் ட்ரெய்லர் கடந்த 12-ம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் கதை என்னுடையது என செல்வா என்பவர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டதுடன் பிகில் படக்குழு படம் சம்பந்தமான ஆவணங்களை உடனாடியாக தாக்கல் செய்யவும் கூறியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த வழக்கு விஜய் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், படத்தின் தணிக்கை முடிந்தும் தணிக்கை சான்று குறித்த எந்த விபரமும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.