விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படமான பிகிலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.
படத்தில் முதல் லுக்குடன் படத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது.
தீபாவளிக்கு பிகில் வெளிவரவுள்ளநிலையில், டீசர் தாமதமானது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், தற்போது மாஸாக வெளிவந்திருக்கும் ட்ரெய்லர் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
இந்த ட்ரெய்லர் குறித்து கோலிவுட் முதல் பாலிவுட் வரை பலரும் தங்களது பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் "சால்ட் அன்ட் பெப்பருக்கு புதிய முகம் கிடைத்து விட்டது" என பிகில் ட்ரெய்லர் குறித்து தனது கருத்தை ட்விட்டி இருந்தார்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், தலைவி FDFS போறிங்களா..? என்று கேட்க "ஸ்பெஷல் பிரீமியர் காட்சி பார்க்கமுடியும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
Hoping for special premiere !— Kasturi Shankar (@KasthuriShankar) October 13, 2019
Salt and Pepper has a new face. 😍 #Rayappan #Thalapathy #vijay #CinematicEpicBigilTrailer #Verithanam #BigilTrailer pic.twitter.com/gtlHg2R8JH— Kasturi Shankar (@KasthuriShankar) October 13, 2019