பிகில் விவகாரம் - WANTED-ஆ வந்து வண்டியில் ஏறிய இளம் நடிகர் - வச்சி செய்யும் அஜித் ரசிகர்கள்


பிகில் திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுபாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில், வழக்கமாக விஜய்படங்கள் ரிலீசாகும்ரிலீசாகும் போது ஏற்படும் பிரச்சனை இப்போதும் ஏற்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்கள் சிலர், இணையத்தில் கசிந்த பிகில் படத்தின் காட்சிகளைபகிர்ந்து வந்தனர். மேலும், #BigilDisaster என்ற டேக்கையும் இந்திய அளவில் ட்ரென்ட் செய்து விட்டனர். 

இதனை பார்த்து கடுப்பான விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு பாக்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் " டேய்.. நிறுத்துங்கடா.. போதும் போதும், நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ..? அவர்கள் பெயரை நீங்களே கெடுக்காதீர்கள். நீங்கள் யாரை குறிப்பிட்டு இப்படி செய்கிறீர்களோ அவர் உங்களை இக்னோர் தான் செய்யப்போகிறார். உங்கள் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என கூறி வாண்டடாக வந்து வண்டியில் ஏறினார். 

சும்மா விடுவார்களா..? அஜித் ரசிகர்கள் சகட்டு மேனிக்கு சாந்தனு பாக்ராஜை வச்சி செய்து வருகிறார்கள். விஜய்யை எதிர்மறையாக விமர்சிப்பவர்களை கேள்வி கேட்கும் சாந்தனுவே மற்ற நடிகர்களை அவரே எதிர்மறையாக பேசி கலாய்த்துள்ளார். 

நிலைமை இப்படி இருக்க, விஜய்யை கலாய்ப்பவர்களை இவர் விமர்சித்தால் யாரு தான் சும்மா இருப்பா..? என்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.












Previous Post Next Post
--Advertisement--